Showing posts with label Personality Development. Show all posts
Showing posts with label Personality Development. Show all posts

Friday, June 4, 2010

எதிர்பார்ப்பதை விட்டு விடுங்கள்


எதிர்பார்ப்பதை விட்டு விட்டால் ஏமாற்றமே இருக்காது. மகிழ்ச்சி இன்மைக்கும், முகம் சுழிப்பதற்கும் என்ன காரணம் என்றால் எதிபார்த்தலில் உண்டான ஏமாற்றம் தான். அது எப்படி வருகிறது எனில், கற்பனையாக எப்பொழுதுமே ஏதாவது ஒன்றை எதிர்பார்க்கிறோம். எனக்கு இப்படி வர வேண்டும், அப்படி வர வேண்டும் என்ற கற்பனையான எதிர்பார்ப்புகள் இல்லாமல், எப்பொழுதுமே நமக்குக் கிடைக்கிறது எல்லாம் நாம் செய்ததினுடைய செயல் விளைவாகத் தான் கிடைக்கிறது.

- வேதாத்திரி மகரிஷி

Monday, May 31, 2010

அறிவறியும் தவம்

இரு விழிகள் மூக்கு முனை குறிப்பாய்நிற்க,
எண்ணத்தைப் புருவங்களிடை நிறுத்தி,
ஒருமையுடன் குருநெறியில் பழகும் போது,
உள்ளொளியே பூரித்து மூலமான
கருவுக்கு மேனோக்கு வேக மூட்டும்;
கருத்துக்கு இந்நிகழ்ச்சி உணர்வாய்த் தோன்றும்;
அருவ நிலையாம் ஆதி உருவாய் வந்த
அத்துவித ரகசியமும் விளக்கமாகும்.

-தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

Sunday, May 2, 2010

My guru's poems

எப்பொருளை எச்செயலை எக்குணத்தை

      எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைந்தால்

அப்பொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்

      அறிவினிலும் உடலினிலும் மாற்றங்காணும்;

இப்பெருமை இயல்பூக்க நியதியாகும்

      எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்

தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மைத்

      தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும்.



- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி